இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt இன்று முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.
இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமைய குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில் இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்துதல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ந சமூக மற்றும் கலாசார துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் போர் நிலமை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt நாட்டின் இளைஞர்களின் தொழிற்பயிற்சியை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் Justine Boillat உம் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் - ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையே சந்திப்பு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt இன்று முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமைய குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில் இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்துதல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ந சமூக மற்றும் கலாசார துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மத்திய கிழக்கின் போர் நிலமை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt நாட்டின் இளைஞர்களின் தொழிற்பயிற்சியை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் Justine Boillat உம் நிகழ்வில் கலந்துகொண்டார்.