• Mar 10 2026

காலி துறைமுகத்தில் ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ!

shanu / Mar 10th 2026, 5:52 pm
image

இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் இலங்கைக்கு எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று கூறினார். 


இரண்டு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அது குறித்து மூன்றாம் நாடு ஒன்றிற்கு அறிவிப்பதில்லை என்றும், அவ்வாறு செய்வார்கள் என தான் நினைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 


"இரண்டு நாடுகள் போரிடும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்கப்போவதாக மூன்றாவது நாட்டிடம் சொல்லும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அவ்வாறு சொல்லியிருக்கவில்லை. கடற்படைக்கு எவ்வாறு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பகுதியில் சடலங்கள் மற்றும் சில உயிர்காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மையத்திற்கு செய்தி கிடைத்தது. 


அங்கு 32 பேர் உயிருடன் இருந்தனர், மேலும் சிலர் காணாமல் போயிருந்தனர். சில சடலங்களை நாம் மீட்டிருந்தோம். செய்தி துல்லியமாக எங்கிருந்து வந்தது என்பதை என்னால் சரியாகக் கூற முடியாது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


காலி துறைமுகத்தில் ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் இலங்கைக்கு எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று கூறினார். இரண்டு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அது குறித்து மூன்றாம் நாடு ஒன்றிற்கு அறிவிப்பதில்லை என்றும், அவ்வாறு செய்வார்கள் என தான் நினைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். "இரண்டு நாடுகள் போரிடும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்கப்போவதாக மூன்றாவது நாட்டிடம் சொல்லும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அவ்வாறு சொல்லியிருக்கவில்லை. கடற்படைக்கு எவ்வாறு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பகுதியில் சடலங்கள் மற்றும் சில உயிர்காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மையத்திற்கு செய்தி கிடைத்தது. அங்கு 32 பேர் உயிருடன் இருந்தனர், மேலும் சிலர் காணாமல் போயிருந்தனர். சில சடலங்களை நாம் மீட்டிருந்தோம். செய்தி துல்லியமாக எங்கிருந்து வந்தது என்பதை என்னால் சரியாகக் கூற முடியாது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement