யாழ்ப்பாணம், சரவணைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்திலேயே நேற்று இந்தச் சிலை உடைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தில் இருந்த சிலை இனந்தெரியாத நபரால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவின் (சி.சி.ரி.வி.) காட்சிகளைப் பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புனிதமான வழிபாட்டுத் தலமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு - சிசிரிவியில் சிக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணம், சரவணைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்திலேயே நேற்று இந்தச் சிலை உடைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆலயத்தில் இருந்த சிலை இனந்தெரியாத நபரால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவின் (சி.சி.ரி.வி.) காட்சிகளைப் பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.புனிதமான வழிபாட்டுத் தலமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.