• Aug 01 2025

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 7 நபர்கள் கைது!

shanuja / Jul 30th 2025, 4:15 pm
image

பொது இடத்தில் வெற்றிலையைத் துப்பிய குற்றச்சாட்டில்   07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்தக் கைது நடவடிக்கை குருநாகலில் கடந்த 26 ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்டது. 


குருநாகலில் சுகாதார பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது குருநாகல் பேருந்து நிலையத்தில்  வெற்றிலை துப்பியிருந்தமை அவதானிக்கப்பட்டது. 


அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 7 பேர் குருநாகல் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட நபர்கள்  எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 


பொது இடங்களில் வெற்றிலை துப்புவது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 7 நபர்கள் கைது பொது இடத்தில் வெற்றிலையைத் துப்பிய குற்றச்சாட்டில்   07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை குருநாகலில் கடந்த 26 ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்டது. குருநாகலில் சுகாதார பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது குருநாகல் பேருந்து நிலையத்தில்  வெற்றிலை துப்பியிருந்தமை அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 7 பேர் குருநாகல் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள்  எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் வெற்றிலை துப்புவது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement