வத்தளை - பள்ளியவத்தையை அண்மித்த கடற்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்த 3 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
வத்தளை, பள்ளியவத்த கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கடலுக்கு சென்றுள்ளனர்.
சீரரற்ற வானிலை காரணமாக மீண்டும் கரைக்கு திரும்பும்போது, பள்ளியாவத்தை கடற்கரையிலிருந்து மேற்காக சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் அவர்கள் பயணித்த படகின் வெளிப்புற இயந்திரம் செயலிழந்துள்ளது.
இதனையடுத்து, இது குறித்து உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் விரைவு படகொன்று அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கடல் நடுவே தத்தளித்த 3 கடற்றொழிலாளர்கள்; கடற்படை எடுத்த உடனடி நடவடிக்கை வத்தளை - பள்ளியவத்தையை அண்மித்த கடற்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்த 3 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட மூவரும் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வத்தளை, பள்ளியவத்த கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கடலுக்கு சென்றுள்ளனர்.சீரரற்ற வானிலை காரணமாக மீண்டும் கரைக்கு திரும்பும்போது, பள்ளியாவத்தை கடற்கரையிலிருந்து மேற்காக சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் அவர்கள் பயணித்த படகின் வெளிப்புற இயந்திரம் செயலிழந்துள்ளது.இதனையடுத்து, இது குறித்து உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் விரைவு படகொன்று அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.