நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 189 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக அறிவித்தலின் பிரகாரம் தெரியவந்துள்ளது.
இவற்றுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 164 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 03 முறைப்பாடுகளும் வேறு காரணங்களுக்காக 7 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை 20.03.2025 இலிருந்து 2025.05.03 வரையான குறித்த காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், 43,339 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாவும் அவற்றுள் 3,640 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 699 முறைப்பாடுகளுக்கு தற்போது நடவடிக்கை எடுத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்துக்குள் 189 முறைப்பாடுகள் பதிவு. நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 189 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக அறிவித்தலின் பிரகாரம் தெரியவந்துள்ளது.இவற்றுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 164 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 03 முறைப்பாடுகளும் வேறு காரணங்களுக்காக 7 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இதேவேளை 20.03.2025 இலிருந்து 2025.05.03 வரையான குறித்த காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், 43,339 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாவும் அவற்றுள் 3,640 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 699 முறைப்பாடுகளுக்கு தற்போது நடவடிக்கை எடுத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.