• Jan 13 2026

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் யாழில் கைது

Chithra / Jan 13th 2026, 7:54 am
image


இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். 

 

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படைய தளத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் யாழில் கைது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் நெடுந்தீவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.  கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படைய தளத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement