• Aug 26 2025

இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் பலி!

shanuja / Aug 26th 2025, 1:51 pm
image

யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு (25) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த குடும்பஸ்தர் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். 


நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார். 


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் பலி யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு (25) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குடும்பஸ்தர் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement