• Aug 26 2025

மானை வேட்டையாடிய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் கைது!!

shanuja / Aug 25th 2025, 8:18 pm
image

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மானை  வேட்டையாடிய சந்தேக நபர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


 

திருகோணமலை மயிலகுடாவெவ மற்றும் மொரவெவ பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் 50க்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அதில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் 

தெரிவித்தனர்.


துப்பாக்கி பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சோதனை இட்டபோது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் மீட்டனர். 


இதனையடுத்து குறித்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியுடன்  ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது  செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மானை வேட்டையாடிய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் கைது திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மானை  வேட்டையாடிய சந்தேக நபர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மயிலகுடாவெவ மற்றும் மொரவெவ பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் 50க்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அதில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கி பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சோதனை இட்டபோது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் மீட்டனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியுடன்  ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது  செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement