• Aug 26 2025

வித்யா கொலை வழக்கு - பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு

Chithra / Aug 26th 2025, 10:59 am
image

யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மாணவி வித்தியாவை, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பிலேயே, விசாரணை திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் முன்னிலையில் குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு நான்கரை வருடங்களுக்கும் அதிக காலம் தேவைப்பட்டதாக சுட்டிக்காட்டினார். 

அதன்படி, மேன்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய காலத்திற்குள் திகதியை வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதற்கமைய, பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மேன்முறையீட்டு மனுக்களை விரைவாக விசாரணை செய்வதற்கு திகதி வழங்கப்படும் என பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்தார். 

அதன்படி, மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. 

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த, சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது மாணவி கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பில் “சுவிஸ் குமார்" உட்பட 07 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. 

எனினும், தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, விடுதலை செய்யுமாறு கோரி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வித்யா கொலை வழக்கு - பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பிலேயே, விசாரணை திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் முன்னிலையில் குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு நான்கரை வருடங்களுக்கும் அதிக காலம் தேவைப்பட்டதாக சுட்டிக்காட்டினார். அதன்படி, மேன்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய காலத்திற்குள் திகதியை வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய, பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மேன்முறையீட்டு மனுக்களை விரைவாக விசாரணை செய்வதற்கு திகதி வழங்கப்படும் என பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்தார். அதன்படி, மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த, சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது மாணவி கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் “சுவிஸ் குமார்" உட்பட 07 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. எனினும், தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, விடுதலை செய்யுமாறு கோரி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement