சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக, ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்றைய தினம்
தொல்பொருள் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி,சம்பூர் பொலிஸார்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றின் கையொப்பத்துடன் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்டது.
இவ் உத்தேச செலவு மதிப்பீடு, மூதூர் நீதிமன்றத்தின் கட்டளையுடன் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவுள்ளது.
அதே நேரத்தில் மாகாண நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பூரில் ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக, ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிக்கப்பட்டுள்ளது.சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்றைய தினம் தொல்பொருள் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி,சம்பூர் பொலிஸார்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றின் கையொப்பத்துடன் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்டது.இவ் உத்தேச செலவு மதிப்பீடு, மூதூர் நீதிமன்றத்தின் கட்டளையுடன் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவுள்ளது. அதே நேரத்தில் மாகாண நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.