• Aug 26 2025

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள படையினர் - சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Chithra / Aug 26th 2025, 11:12 am
image

கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொது ஒழுங்கை பேணுவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.

ஏதேனும் வன்முறை சம்பவங்களையோ, சட்ட மீறல்களையோ எதிர்கொள்வதற்காக, உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதியின்மை ஏற்படுமானால் உடனடி பதிலளிக்க, கலக தடுப்புப் படைகள் மற்றும் மேலதிக பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள படையினர் - சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பொது ஒழுங்கை பேணுவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.ஏதேனும் வன்முறை சம்பவங்களையோ, சட்ட மீறல்களையோ எதிர்கொள்வதற்காக, உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், அமைதியின்மை ஏற்படுமானால் உடனடி பதிலளிக்க, கலக தடுப்புப் படைகள் மற்றும் மேலதிக பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement