• Mar 10 2026

யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Chithra / Mar 10th 2026, 11:34 am
image


யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 


டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். 


பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் சடலமாக தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.


இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் சடலமாக தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement