• Mar 10 2026

துபாய்க் கடைகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை- மக்களுக்கு விடுக்கபட்ட அறிவிப்பு !

Ziya / Mar 10th 2026, 11:59 am
image

துபாய்க் கடைகளில் உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன, வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் இல்லை எனப் பயப்பட தேவையில்லை. 


துபாய் அரசு அடுத்த சில மாதங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.


உணவுத் தொழில்துறையினர் ஏற்கெனவே நிலைத்த தளவாடக் கட்டமைப்புகளைப் பின்பற்றுவதால் இது சாத்தியமாகியுள்ளது. 


இந்த கட்டமைப்புகள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், 2024 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது நிறுவப்பட்டவை.


துபாய் 90% உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நகரமாகும். 


ஆனால் மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகள், ஈரானிய ஏவுகணைகள்  பாதிப்புகளை ஏற்படுத்துவதால்,உணவுப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பதை உறுதிசெய்வது பெரிய சவாலாக உள்ளது.


தற்போதைய நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான இடையூறு மிகவும் குறைவாக உள்ளது. 


ஆனால், இது எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகள் ஈரானிய ஏவுகணைகளாலும் ஆளில்லா விமானங்களும்  தாக்கப்பட்டதால் அங்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


மத்திய கிழக்குப் பூசலால் முக்கியக் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. எண்ணெய்ச் சந்தையும் தங்கத்தின் விலையும் ஆட்டங்கண்டுள்ளன.


இந்திய அரிசி, ஆஸ்திரேலிய இறைச்சி, இந்தோனீசியக் காப்பி முதலியவற்றின் வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.


துபாய்க் கடைகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை- மக்களுக்கு விடுக்கபட்ட அறிவிப்பு துபாய்க் கடைகளில் உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன, வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் இல்லை எனப் பயப்பட தேவையில்லை. துபாய் அரசு அடுத்த சில மாதங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.உணவுத் தொழில்துறையினர் ஏற்கெனவே நிலைத்த தளவாடக் கட்டமைப்புகளைப் பின்பற்றுவதால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த கட்டமைப்புகள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், 2024 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது நிறுவப்பட்டவை.துபாய் 90% உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நகரமாகும். ஆனால் மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகள், ஈரானிய ஏவுகணைகள்  பாதிப்புகளை ஏற்படுத்துவதால்,உணவுப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பதை உறுதிசெய்வது பெரிய சவாலாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான இடையூறு மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், இது எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகள் ஈரானிய ஏவுகணைகளாலும் ஆளில்லா விமானங்களும்  தாக்கப்பட்டதால் அங்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.மத்திய கிழக்குப் பூசலால் முக்கியக் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. எண்ணெய்ச் சந்தையும் தங்கத்தின் விலையும் ஆட்டங்கண்டுள்ளன.இந்திய அரிசி, ஆஸ்திரேலிய இறைச்சி, இந்தோனீசியக் காப்பி முதலியவற்றின் வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement