நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனம் பொகவந்தலாவ பகுதியில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை, தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் பயன்பாட்டிலிருந்த குறித்த வாகனத்தில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வசந்தன் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஜனாஷ்டன் ஆகியோர் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொகவந்தலாவ பொலிஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், வாகன சாரதி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வாகனத்தில் பயணித்த இரு உறுப்பினர்களும் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, சாரதி கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நோர்வூட் பிரதேச சபை வாகனம் பறிமுதல். சாரதி மதுபோதையில் கைது நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனம் பொகவந்தலாவ பகுதியில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (24) மாலை, தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் பயன்பாட்டிலிருந்த குறித்த வாகனத்தில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வசந்தன் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஜனாஷ்டன் ஆகியோர் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொகவந்தலாவ பொலிஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், வாகன சாரதி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வாகனத்தில் பயணித்த இரு உறுப்பினர்களும் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து, சாரதி கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.