• Jul 25 2026

தனுஷ்கோடியில் சிக்கிய இரு இலங்கையர்கள்: வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பா?

Aathira / Jul 25th 2026, 11:19 am
image

சட்டவிரோதமாக படகில் இந்தியாவின் தனுஷ்கோடிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரு இலங்கையர்கள், அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இருவரையும் இந்தியக் கடலோரப் பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் இவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், இந்த இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களை ஒரு வாரத்திற்குள் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்கோடியில் சிக்கிய இரு இலங்கையர்கள்: வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பா சட்டவிரோதமாக படகில் இந்தியாவின் தனுஷ்கோடிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரு இலங்கையர்கள், அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த இருவரையும் இந்தியக் கடலோரப் பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் இவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.மேலும், இந்த இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சந்தேகநபர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவர்களை ஒரு வாரத்திற்குள் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement