• Jul 24 2026

ட்ரோன் விபத்தால் திடீர் பதற்றம்-முடங்கிய விமான சேவை மீண்டும் தொடக்கம்!

Ziya / Jul 24th 2026, 3:53 pm
image

ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.


விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் விபத்துக்குள்ளானதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.


இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரண்டு பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.


இந்த சம்பவத்தில் உடனடியாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏற்பட்ட தீயும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எர்பில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ட்ரோன் விபத்தால் திடீர் பதற்றம்-முடங்கிய விமான சேவை மீண்டும் தொடக்கம் ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் விபத்துக்குள்ளானதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரண்டு பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.இந்த சம்பவத்தில் உடனடியாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏற்பட்ட தீயும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எர்பில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement