• Jul 25 2026

நீங்கள் நியாயமாக நடந்து கொள்வதில்லை-பத்திரிகையாளர்களுடன் சீண்டிய டிரம்ப் !

Ziya / Jul 25th 2026, 9:29 am
image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் (WHCA) மாநாட்டில் தனது நிறைவுரையை நிகழ்த்தினார்.


இதன்போது, ஊடகங்களுடனான தனது உறவு குறித்து பேசிய டிரம்ப், மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


“இந்த அறையில் உள்ள மக்களை நான் மிகவும் மதிக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் என்னிடம் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது ஒருவேளை நீங்கள் நியாயமாகத்தான் நடந்துகொள்கிறீர்களோ... எனக்குத் தெரியவில்லை. நான் அப்படி நினைக்கவில்லை,” என்று டிரம்ப் நகைச்சுவை கலந்த வகையில் தெரிவித்தார்.


அமெரிக்க ஊடகங்களுடன் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் டிரம்ப், பல சந்தர்ப்பங்களில் செய்தி நிறுவனங்களையும் பத்திரிகையாளர்களையும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.


இந்நிலையில், WHCA மாநாட்டில் அவர் தெரிவித்த இந்தக் கருத்து, ஊடகங்களுடனான தனது உறவை சற்று நகைச்சுவையான பாணியில் வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் நியாயமாக நடந்து கொள்வதில்லை-பத்திரிகையாளர்களுடன் சீண்டிய டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் (WHCA) மாநாட்டில் தனது நிறைவுரையை நிகழ்த்தினார்.இதன்போது, ஊடகங்களுடனான தனது உறவு குறித்து பேசிய டிரம்ப், மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.“இந்த அறையில் உள்ள மக்களை நான் மிகவும் மதிக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் என்னிடம் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது ஒருவேளை நீங்கள் நியாயமாகத்தான் நடந்துகொள்கிறீர்களோ. எனக்குத் தெரியவில்லை. நான் அப்படி நினைக்கவில்லை,” என்று டிரம்ப் நகைச்சுவை கலந்த வகையில் தெரிவித்தார்.அமெரிக்க ஊடகங்களுடன் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் டிரம்ப், பல சந்தர்ப்பங்களில் செய்தி நிறுவனங்களையும் பத்திரிகையாளர்களையும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.இந்நிலையில், WHCA மாநாட்டில் அவர் தெரிவித்த இந்தக் கருத்து, ஊடகங்களுடனான தனது உறவை சற்று நகைச்சுவையான பாணியில் வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement