• May 23 2025

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற உலக தேனீக்கள் தின நிகழ்வு...!

Sharmi / May 22nd 2025, 10:45 am
image

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தினால் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அனுசரணையுடன் உலக தேனீ தின நிகழ்வு நேற்றையதினம்(21) புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வள்ளிபுனம் பிரதேச பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது தேனீ வளர்ப்பு சம்பந்தமான கருத்தரங்கும், தேனீ வளர்ப்புக்கான தேனீப் பெட்டிகளும் வழங்கப்பட்டதனை தொடர்ந்து தேனீ வளர்ப்பு பிரதேசத்திற்கான கள விஜயமும் இடம்பெற்று தேனீ வளர்ப்பு தொடர்பான செய்முறைகள் மூலம் தெளிவூட்டப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பிரிவின் விவசாய போதனாசிரியர் பு.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கிருபவதனி சிவதீபன், உதவி விவசாய பணிப்பாளர்  மேரிஆன்சலா லக்சன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் து.ஜெயந்தன் , காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் விவசாய நிபுணர் க.வசந்தன், கிராம சேவையாளர்கள்  விவசாய போதனாசிரியர்கள், கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற உலக தேனீக்கள் தின நிகழ்வு. வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தினால் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அனுசரணையுடன் உலக தேனீ தின நிகழ்வு நேற்றையதினம்(21) புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வள்ளிபுனம் பிரதேச பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வின் போது தேனீ வளர்ப்பு சம்பந்தமான கருத்தரங்கும், தேனீ வளர்ப்புக்கான தேனீப் பெட்டிகளும் வழங்கப்பட்டதனை தொடர்ந்து தேனீ வளர்ப்பு பிரதேசத்திற்கான கள விஜயமும் இடம்பெற்று தேனீ வளர்ப்பு தொடர்பான செய்முறைகள் மூலம் தெளிவூட்டப்பட்டிருந்தது.புதுக்குடியிருப்பு மந்துவில் பிரிவின் விவசாய போதனாசிரியர் பு.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கிருபவதனி சிவதீபன், உதவி விவசாய பணிப்பாளர்  மேரிஆன்சலா லக்சன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் து.ஜெயந்தன் , காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் விவசாய நிபுணர் க.வசந்தன், கிராம சேவையாளர்கள்  விவசாய போதனாசிரியர்கள், கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement