• Jul 08 2025

இலங்கைக்கு வரி நிவாரணம் கிடைக்குமா? அமெரிக்காவின் இறுதி தீர்மானம்

Chithra / Jul 8th 2025, 9:40 am
image

 

அமெரிக்காவால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைப்பது தொடர்பில் இன்றும் சாதகமான பதில்கள் எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

இதன்படி, இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். 

இந்தநிலையில், அமெரிக்காவின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் எனவும், இலங்கைக்கு வரி நிவாரணம் கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்பதாகப் பிரதி நிதியமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரி நிவாரணம் கிடைக்குமா அமெரிக்காவின் இறுதி தீர்மானம்  அமெரிக்காவால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைப்பது தொடர்பில் இன்றும் சாதகமான பதில்கள் எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி, இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்தநிலையில், அமெரிக்காவின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் எனவும், இலங்கைக்கு வரி நிவாரணம் கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்பதாகப் பிரதி நிதியமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement