தீவக வலயத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாக காணப்படுகின்றது.
அந்தவகையில் குறித்த பாடசாலைக்கு 12 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினருக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் ஒன்றும் வெண்கலப் பதக்கம் ஒன்றும் கிடைத்துள்ளது.
அதுபோல 4×50 மீட்டர் அஞ்சல் போட்டியில் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் நீளம் பாய்தலில் ஒரு வெண்கலப் பதக்கமும், 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஒன்றும் கிடைத்துள்ளது.
அத்துடன் 40 புள்ளிகளை பெற்று குறித்த பாடசாலை முதலாம் இடத்தையும், 26 புள்ளிகளை பெற்று மன்/கற்கிடந்தகுளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது இரண்டாவது இடத்தையும், 10 புள்ளிகளை பெற்று மன்/சென். ஜோசப் மஹா வித்தியாலயமானது மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்; யாழில் கிராமப்புற பாடசாலை ஒன்றின் அதிரடி சாதனை தீவக வலயத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாக காணப்படுகின்றது.அந்தவகையில் குறித்த பாடசாலைக்கு 12 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினருக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் ஒன்றும் வெண்கலப் பதக்கம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதுபோல 4×50 மீட்டர் அஞ்சல் போட்டியில் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் நீளம் பாய்தலில் ஒரு வெண்கலப் பதக்கமும், 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஒன்றும் கிடைத்துள்ளது.அத்துடன் 40 புள்ளிகளை பெற்று குறித்த பாடசாலை முதலாம் இடத்தையும், 26 புள்ளிகளை பெற்று மன்/கற்கிடந்தகுளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது இரண்டாவது இடத்தையும், 10 புள்ளிகளை பெற்று மன்/சென். ஜோசப் மஹா வித்தியாலயமானது மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.