இஸ்ரேல்-லெபனான் எல்லையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தெற்கு லெபனானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் தடைசெய்யப்பட்ட 'வெள்ளை பாஸ்பரஸ்' குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு லெபனானின் யோமோர் நகரில், மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மேலேயே இந்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.
இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது 800°C வெப்பத்தில் எரியக்கூடிய இந்த ரசாயனம், மனித உடலின் எலும்பு வரை ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
"ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மரங்களுக்கு அடியில் பதுங்குவதைத் தவிர்க்கவே, இஸ்ரேல் நிலத்தைச் சுடுகாடாக்கும் (Scorched Earth Policy) இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) அமைப்பு, குடியிருப்புப் பகுதிகளில் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது 'சட்டவிரோதமானது' என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் மழை இஸ்ரேல்-லெபனான் எல்லையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தெற்கு லெபனானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் தடைசெய்யப்பட்ட 'வெள்ளை பாஸ்பரஸ்' குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.தெற்கு லெபனானின் யோமோர் நகரில், மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மேலேயே இந்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது 800°C வெப்பத்தில் எரியக்கூடிய இந்த ரசாயனம், மனித உடலின் எலும்பு வரை ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது."ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மரங்களுக்கு அடியில் பதுங்குவதைத் தவிர்க்கவே, இஸ்ரேல் நிலத்தைச் சுடுகாடாக்கும் (Scorched Earth Policy) இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) அமைப்பு, குடியிருப்புப் பகுதிகளில் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது 'சட்டவிரோதமானது' என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.