• Aug 13 2026

மழையின்மையால் வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் விவசாயிகள் பாதிப்பு

Chithra / Aug 11th 2026, 9:50 am
image


தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


குறிப்பாக, போதிய நீர் கிடைக்காததால் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெல் வயல்கள் பாதிக்கப்பட்டு, பயிர்கள் அழியத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


அதேவேளை, நீர் பற்றாக்குறை காரணமாக தமது பயிர்களின் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதானிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.


இதனால், மழையின்மை மேலும் தொடரும் பட்சத்தில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பயிர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


மழையின்மையால் வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் விவசாயிகள் பாதிப்பு தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, போதிய நீர் கிடைக்காததால் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெல் வயல்கள் பாதிக்கப்பட்டு, பயிர்கள் அழியத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை, நீர் பற்றாக்குறை காரணமாக தமது பயிர்களின் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதானிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதனால், மழையின்மை மேலும் தொடரும் பட்சத்தில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பயிர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement