• Jul 15 2025

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு

Chithra / Jun 11th 2025, 1:17 pm
image


மத்திய மலை நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும்  பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு இன்று (11) அதிகாலை திறக்கப்பட்டன.

மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 

நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.


எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்  கிளயார், டெவன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு மத்திய மலை நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.நீரேந்தும்  பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு இன்று (11) அதிகாலை திறக்கப்பட்டன.மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.மேலும், சென்  கிளயார், டெவன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now