மன்னார் நகரசபையின் தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டார்
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று (24) மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவுக்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதன்போது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தெரிவில் பெரும்பான்மை வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
மன்னார் நகரசபையைக் கைப்பற்றியது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மன்னார் நகரசபையின் தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டார்மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று (24) மன்னார் நகர சபையில் நடைபெற்றது.இதன்போது தவிசாளரை தெரிவுக்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.இதன்போது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். உப தவிசாளர் தெரிவில் பெரும்பான்மை வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.