இந்தியாவில் விற்பனை கணக்கில் வராத மதுபானபானங்களை எலிகள் குடித்ததாக கூறப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது
இந் நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது
அதனடிப்படையில் தான்பாத் மாவட்டத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டது
அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராதமையால் இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கூறிய பதில் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில்,
மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபாட்டில்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார்.
காலியான அந்த மதுபாட்டில்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இவையெல்லாம் அரசின் ஊழலை மறைக்கவே அரசு நடத்தும் நாடகம் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளதோடு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, முக்கிய குற்றவாளிகளையும் எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடுள்ளார்
மதுபானத்தை குடித்த எலிகள் எப்படி சாத்தியம் -விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் இந்தியாவில் விற்பனை கணக்கில் வராத மதுபானபானங்களை எலிகள் குடித்ததாக கூறப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது இந் நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்யப்பட்டதுஅதனடிப்படையில் தான்பாத் மாவட்டத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டதுஅதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராதமையால் இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் கூறிய பதில் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில்,மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபாட்டில்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபாட்டில்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.இவையெல்லாம் அரசின் ஊழலை மறைக்கவே அரசு நடத்தும் நாடகம் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளதோடு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, முக்கிய குற்றவாளிகளையும் எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடுள்ளார்