• Oct 15 2026

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை! அடுத்த வாரம் முதல் தீவிர சோதனை

Aathira / Oct 15th 2026, 8:40 am
image

சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவைக் கையாளும் நிலையங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து, உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் பொதியிடல் மற்றும் பெயரிடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, உணவைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவைக் கையாளும் பணியாளர்கள் பொருத்தமான கையுறைகளை அணிவதுடன், சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்கள் முன்னங்கி மற்றும் தலைக்கவச வலை அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமையலறைகள் மற்றும் உணவு தயாரிக்கும் பகுதிகளைத் தூய்மையாகப் பேணுவதுடன், அங்கு பணிபுரியும் அனைவரும் செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருப்பதும் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வாரம் முதல் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அனைத்து உணவைக் கையாளும் நிலையங்களிலும் தீவிர சுகாதாரப் பர

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை அடுத்த வாரம் முதல் தீவிர சோதனை சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவைக் கையாளும் நிலையங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து, உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் பொதியிடல் மற்றும் பெயரிடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.இதன்போது, உணவைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.உணவைக் கையாளும் பணியாளர்கள் பொருத்தமான கையுறைகளை அணிவதுடன், சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்கள் முன்னங்கி மற்றும் தலைக்கவச வலை அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சமையலறைகள் மற்றும் உணவு தயாரிக்கும் பகுதிகளைத் தூய்மையாகப் பேணுவதுடன், அங்கு பணிபுரியும் அனைவரும் செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருப்பதும் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், எதிர்வரும் வாரம் முதல் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அனைத்து உணவைக் கையாளும் நிலையங்களிலும் தீவிர சுகாதாரப் பர

Advertisement

Advertisement

Advertisement