இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் காற்றுச் சுழற்சியால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
தெற்கு மத்திய வங்காள விரிகுடாவில் இன்று (13) அதிகாலை காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் என முன்னறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் காற்றுச் சுழற்சியின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) பிற்பகல் முதல் மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாளை (14) திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம், புத்தளம், கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மாங்குளம், மல்லாவி, பாண்டியன்குளம், பனங்காமம், வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, ஓமந்தை, வவுனியா மற்றும் கற்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அடுத்த 96 மணித்தியாலங்களில் மொத்தமாக 370 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கனமழை தொடரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மலையகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், தொடர்ச்சியான கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வீசத் தொடங்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைக்கும் நிந்தவூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வடகீழ்ப் பருவக்காற்றின் முதல் தாக்கம் ஏற்படக்கூடும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.
உருவாகும் என எதிர்பார்க்கப்படும் காற்றுச் சுழற்சியும் வடகீழ்ப் பருவக்காற்றின் ஆரம்பமும் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காற்றுச் சுழற்சி கிழக்குக் கரையோரத்தை அண்மித்து நகரக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்யும் கனமழையால் உருவாகும் மேலதிக நீர் கிழக்கு மாகாணத்தை நோக்கிப் பாயக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை நெருங்கும் காற்றுச் சுழற்சி; அடுத்த 96 மணித்தியாலங்களில் என்ன நடக்கப்போகிறது இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் காற்றுச் சுழற்சியால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.தெற்கு மத்திய வங்காள விரிகுடாவில் இன்று (13) அதிகாலை காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் என முன்னறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தக் காற்றுச் சுழற்சியின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று (13) பிற்பகல் முதல் மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.நாளை (14) திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம், புத்தளம், கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மாங்குளம், மல்லாவி, பாண்டியன்குளம், பனங்காமம், வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, ஓமந்தை, வவுனியா மற்றும் கற்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அடுத்த 96 மணித்தியாலங்களில் மொத்தமாக 370 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கனமழை தொடரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே மலையகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், தொடர்ச்சியான கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.2026ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வீசத் தொடங்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைக்கும் நிந்தவூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வடகீழ்ப் பருவக்காற்றின் முதல் தாக்கம் ஏற்படக்கூடும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.உருவாகும் என எதிர்பார்க்கப்படும் காற்றுச் சுழற்சியும் வடகீழ்ப் பருவக்காற்றின் ஆரம்பமும் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.காற்றுச் சுழற்சி கிழக்குக் கரையோரத்தை அண்மித்து நகரக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்யும் கனமழையால் உருவாகும் மேலதிக நீர் கிழக்கு மாகாணத்தை நோக்கிப் பாயக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இதனால் குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.மேலும், எதிர்வரும் நாட்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.