• Oct 15 2026

ஒரே உடலுடன் 2 தலைகள் கொண்ட இரட்டையர்கள்

Ziya / Oct 15th 2026, 5:10 pm
image

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், ஒரே உடலுடன் இரண்டு தலைகளைக் கொண்ட ஆண் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த அரிய பிறப்பு மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மருத்துவத் துறையில் “டைசெஃபாலிக் பாரபேகஸ்” (Dicephalic Parapagus) எனப்படும் இந்த நிலை, ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் மிகவும் அரிதான வகையாகும். 


இதில் குழந்தைகள் ஒரே உடலைப் பகிர்ந்துகொண்டு, தனித்தனியான தலைகளைக் கொண்டிருப்பார்கள். இதயம் உள்ளிட்ட உட்புற உறுப்புகளின் அமைப்பு ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடலாம்.


குழந்தைகளும் தாயும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஒரே உடலுடன் 2 தலைகள் கொண்ட இரட்டையர்கள் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், ஒரே உடலுடன் இரண்டு தலைகளைக் கொண்ட ஆண் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த அரிய பிறப்பு மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மருத்துவத் துறையில் “டைசெஃபாலிக் பாரபேகஸ்” (Dicephalic Parapagus) எனப்படும் இந்த நிலை, ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் மிகவும் அரிதான வகையாகும். இதில் குழந்தைகள் ஒரே உடலைப் பகிர்ந்துகொண்டு, தனித்தனியான தலைகளைக் கொண்டிருப்பார்கள். இதயம் உள்ளிட்ட உட்புற உறுப்புகளின் அமைப்பு ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடலாம்.குழந்தைகளும் தாயும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement