• May 06 2025

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது

Chithra / May 6th 2025, 1:03 pm
image

 

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது  சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர்.மாணவர்கள் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மரணம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement