காலி - பிடிகல - பெலவத்தை பிரதான வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் கடந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) பெய்த கடும் மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவன் விபத்தில் பலி காலி - பிடிகல - பெலவத்தை பிரதான வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (13) பெய்த கடும் மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.