• Apr 24 2026

நிபந்தனையற்ற சரணடைவு! ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

Chithra / Mar 8th 2026, 9:56 am
image

 

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு "நிபந்தனையற்ற சரணடைவு" எனும் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், 


ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்போவதில்லை என்றும், அந்நாடு முழுமையாகச் சரணடையும் வரை 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) தொடரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். இஜாஸ் சுட்டிக்காட்டியது போல, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஏற்கனவே 3,000-க்கும் மேற்பட்ட துல்லியத் தாக்குதல்கள் மூலம் சிதைத்துள்ளன.


இந்தச் சூழலில், ஈரானை மீண்டும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப உதவுவதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதற்காக "Make Iran Great Again" (MIGA!) எனும் புதிய சுலோகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.


இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.


இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிபந்தனையற்ற சரணடைவு ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை  ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு "நிபந்தனையற்ற சரணடைவு" எனும் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்போவதில்லை என்றும், அந்நாடு முழுமையாகச் சரணடையும் வரை 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) தொடரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். இஜாஸ் சுட்டிக்காட்டியது போல, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஏற்கனவே 3,000-க்கும் மேற்பட்ட துல்லியத் தாக்குதல்கள் மூலம் சிதைத்துள்ளன.இந்தச் சூழலில், ஈரானை மீண்டும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப உதவுவதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதற்காக "Make Iran Great Again" (MIGA) எனும் புதிய சுலோகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement