• Jul 22 2025

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 25 பேர் காயம்- அதிகாலையில் சம்பவம்

Chithra / Jul 21st 2025, 8:49 am
image


கேகாலை, கலிகமுவ பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்தொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்தும், 

கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கேகாலை மற்றும் வரக்காபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 25 பேர் காயம்- அதிகாலையில் சம்பவம் கேகாலை, கலிகமுவ பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.தனியார் பேருந்தொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கேகாலை மற்றும் வரக்காபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement