• Jul 20 2025

ஒரே பெண்ணை திருமணம் செய்த இரு சகோதரர்கள்; பலரை வியப்பில் ஆழ்த்திய வினோத பாரம்பரியம்

Chithra / Jul 20th 2025, 11:21 am
image


இந்தியாவின் இமாச்சல் மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தில் சமீபத்தில் பகிரங்கமாக வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஹட்டி இனத்தைச் சேர்ந்த  சகோதரர்களான பிரதீப் நெகி, கபில் நெகி ஆகியோரே, இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான் என்பவரை திருமணம் செய்துள்ளனர். 

இந்த திருமணம் பகிரங்கமாக பொது வெளியில் நடத்தப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் முறைக்கு ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என்று பாரம்பரியமாக அழைக்கின்றனர்.


இந்த வழக்கம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் காணப்படுகிறது.

மூதாதையர்களின் சொத்து பிரிந்து போக கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும், இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதாக கூறுகின்றனர். 

எனினும், இந்த நடைமுறை தற்போதைய கலாச்சார மாற்றம், நவீனம் போன்வற்றால் கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

மணப்பெண் சுனிதா திருமணம் தொடர்பில் கூறுகையில்

“இந்த முடிவு என்னுடையது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி நான் நன்கறிவேன். விருப்பப்பட்டுதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.


ஒரே பெண்ணை திருமணம் செய்த இரு சகோதரர்கள்; பலரை வியப்பில் ஆழ்த்திய வினோத பாரம்பரியம் இந்தியாவின் இமாச்சல் மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தில் சமீபத்தில் பகிரங்கமாக வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹட்டி இனத்தைச் சேர்ந்த  சகோதரர்களான பிரதீப் நெகி, கபில் நெகி ஆகியோரே, இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான் என்பவரை திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் பகிரங்கமாக பொது வெளியில் நடத்தப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் முறைக்கு ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என்று பாரம்பரியமாக அழைக்கின்றனர்.இந்த வழக்கம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் காணப்படுகிறது.மூதாதையர்களின் சொத்து பிரிந்து போக கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும், இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதாக கூறுகின்றனர். எனினும், இந்த நடைமுறை தற்போதைய கலாச்சார மாற்றம், நவீனம் போன்வற்றால் கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.மணப்பெண் சுனிதா திருமணம் தொடர்பில் கூறுகையில்“இந்த முடிவு என்னுடையது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி நான் நன்கறிவேன். விருப்பப்பட்டுதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement