• Aug 12 2025

யாழில் பெருமளவு கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது

Chithra / Aug 12th 2025, 1:37 pm
image


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மறவன்புலவு - அறுகுவெளி பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, 284 கிலோ 500 கிராம் எடையுள்ள, 7 கோடி ரூபாய்கும் அதிகமான பெறுமதியான கஞ்சா பொதிகளும் மீட்கப்பட்டன. 

கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்,

ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாகவும் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.  

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் பின்னர் அவர்களை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. 

யாழில் பெருமளவு கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மறவன்புலவு - அறுகுவெளி பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 284 கிலோ 500 கிராம் எடையுள்ள, 7 கோடி ரூபாய்கும் அதிகமான பெறுமதியான கஞ்சா பொதிகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்,ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாகவும் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.  சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர்களை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement