கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் உதிரி பாகங்களில் மறைத்து வைக்கப்பட்ட, 408 பவுண் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் பெறுமதி 11 கோடியே 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிலாபத்தை சேர்ந்த 58 வயதான தொழிலதிபர், கார் உதிரி பாகங்களுக்கான உரிய வரிகளை செலுத்தி, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.
எனினும் தொழிலதிபர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு அவரை கைது செய்தனர்.
பயணி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த தங்க பிஸ்கட்டுகளை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இலங்கை தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கார் உதிரி பாகங்களில் மறைத்து வைக்கப்பட்ட, 408 பவுண் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவற்றின் பெறுமதி 11 கோடியே 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.சிலாபத்தை சேர்ந்த 58 வயதான தொழிலதிபர், கார் உதிரி பாகங்களுக்கான உரிய வரிகளை செலுத்தி, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.எனினும் தொழிலதிபர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு அவரை கைது செய்தனர்.பயணி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த தங்க பிஸ்கட்டுகளை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.