• Aug 12 2025

அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி - ஜனாதிபதி

shanuja / Aug 12th 2025, 12:42 pm
image

அரச சேவைக்கு 62,000  பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் 


நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாற்றாமல், நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்குவதே இதுவரையிலான மாநாட்டின் இலக்காக இருப்பதாகக் கூறினார்.

  

மேலும், "நாங்கள் இன்று ஜனாதிபதி, அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கிறோம். ஆனால், நாங்கள் பதவி விலகும் நாளை மனதில் கொண்டே இந்தப் பதவிகளை ஏற்றுள்ளோம். என்றென்றும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. 


இந்த நாடு அழிவுகரமான குழுவின் கைகளில் இருந்து மீட்கப்பட்டு, இப்போது நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம். 


எதிர்காலத்தில் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் பணியாற்றுகிறோம். நாங்கள் பதவிகளில் ஒட்டிக்கொள்ளவில்லை. 


நேர்மை, திறமை மற்றும் மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் புதிய இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும்," என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி - ஜனாதிபதி அரச சேவைக்கு 62,000  பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாற்றாமல், நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்குவதே இதுவரையிலான மாநாட்டின் இலக்காக இருப்பதாகக் கூறினார்.  மேலும், "நாங்கள் இன்று ஜனாதிபதி, அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கிறோம். ஆனால், நாங்கள் பதவி விலகும் நாளை மனதில் கொண்டே இந்தப் பதவிகளை ஏற்றுள்ளோம். என்றென்றும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இந்த நாடு அழிவுகரமான குழுவின் கைகளில் இருந்து மீட்கப்பட்டு, இப்போது நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் பணியாற்றுகிறோம். நாங்கள் பதவிகளில் ஒட்டிக்கொள்ளவில்லை. நேர்மை, திறமை மற்றும் மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் புதிய இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும்," என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement