தண்ணீர் மோட்டர்களைத் திருடி பெயர் பலகைகளை மாற்றி விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் 11 மோட்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மோட்டர்கள் புத்தளம் நகரில் கடையொன்றில் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளரினால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸாருக்கு, சந்தேக நபர் ஒருவர் வேறு ஒரு கடையொன்றில் மோட்டர் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய திருடப்பட்ட மோட்டர்கள் சிலவற்றுடன் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தண்ணீர் மோட்டர்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பெயர் பலகைகளை (ஸ்டிக்கர்கள்) மாற்றி ஒட்டி மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள 28 தண்ணீர் மோட்டார்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் 11 மோட்டார்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வந்த தண்ணீர் மோட்டர் இறால் கூண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரிக்கர்களை மாற்றி ஒட்டி பல மோட்டர்கள் விற்பனை;11 மோட்டார்களுடன் மாட்டிய சந்தேகநபர் தண்ணீர் மோட்டர்களைத் திருடி பெயர் பலகைகளை மாற்றி விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் 11 மோட்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மோட்டர்கள் புத்தளம் நகரில் கடையொன்றில் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளரினால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸாருக்கு, சந்தேக நபர் ஒருவர் வேறு ஒரு கடையொன்றில் மோட்டர் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய திருடப்பட்ட மோட்டர்கள் சிலவற்றுடன் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த தண்ணீர் மோட்டர்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பெயர் பலகைகளை (ஸ்டிக்கர்கள்) மாற்றி ஒட்டி மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள 28 தண்ணீர் மோட்டார்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் 11 மோட்டார்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வந்த தண்ணீர் மோட்டர் இறால் கூண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.