யுத்தம் ஏதுமற்ற சூழலில் அப்பாவி மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து கொலை செய்து ஈவிரக்கமின்றி குளக்கரையில் வீசிய இராணுவத்தினர் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்றும் நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் நிர்வாகம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
கடந்த 7ஆம் திகதி வியாழன் இரவு முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அப்பகுதியிலுள்ள 66ஆம் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரால் வரவழைக்கப்பட்டு மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மோசமான முறையில் தாக்குதலுக்குள்ளாகி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மூவர் இராணுவத்தினரில் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஒருவரின் நிலை தெரியாத நிலையில் எட்டாம்திகதி காலை முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னர் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர்.
யுத்தம் முடிந்த காலத்திலிருந்து வடக்கு-கிழக்கு என்பது இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கின்றது. மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட படையினர் வடக்கு-கிழக்கிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக முல்லைத்தீவில் ஆறு பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இராணுவம் அங்கு நிலைகொண்டுள்ளது.
யுத்தம் முடிந்து 15வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்ற சூழலில் இவ்வளவு பெருந்தொகையான இராணுவமும் முகாம்களும் வடக்கு-கிழக்கில் தேவையா என்ற கேள்வி தொடர்கின்றது. மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது.
யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கு-கிழக்கில் ஆயுத ரீதியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எவ்வித வெளிப்படுத்தல்களும் இல்லை. மாறாக, தென்பகுதியில் நாளாந்தம் துப்பாக்கிச் சூடும் அதனால் கொலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு பொலிசாரே போதுமானதாக இருக்கின்ற பொழுது தொடர்ந்து இராணுவத்தினரை அதிதுமாகக் குவித்து வைத்திருப்பதும் நாம் என்ன செய்தாலும் சட்டம் எம்மை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையும் இராணுவத்தினர் எல்லைமீறிச் செல்வதற்கும் கொலை செய்வதற்கும் காரணமாக அமைகின்றது.
இராணுவத்தினர் தொடர்பாகவும் அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவிலான அவநம்பிக்கைகள் இருக்கின்றன. வடக்கில் நடைபெறுகின்ற போதை வஸ்த்துகள் கடத்த, வியாபாரம் தொடர்பாக படையினருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையில் மறைமுக தொடர்புகள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
படையினர் தொடர்பில் யுத்தத்தின் பின்னர் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருப்பினும்கூட, இதுவரை ஆக்கபூர்வமான விசாரணைகளோ இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளோ இதுவரை முன்னெடுக்கப்பட்டதாக இதுவரை நாம் அறியவில்லை.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபொழுது தமிழ் மக்களுக்குரித்தான காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்றும் பல்வேறு உறுதிமொழிகள் கொடுத்திருந்தாலும்கூட காணிகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் இக்காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினரின் அடாவடித்தனங்களும் குறையவில்லை.
எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். அவரது மனைவி இப்பொழுது கணவனை இழந்து விதவையாக்கப்பட்டுள்ளதுடன் அவரதும் அவரது குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் முன்வைக்கின்றது.
1. கபில்ராஜின் மனைவிக்கும் அவரது குழந்தைக்கும் அவரது எதிர்காலத்திற்குப் போதுமான நட்டஈட்டை வழங்க வேண்டும்.
2. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தவாறு படையினர் குடியிருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
3. மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படைத்தரப்புகள்; வடக்கு-கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
4. தாங்கள் என்ன குற்றம் செய்தாலும் தப்பித்துக்கொள்ளும் படையினரின் எண்ணத்தை மாற்றும் முகமாக இதில் சம்பந்தப்பட்ட படையினருக்கு கொலைக் குற்றத்திற்கான உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.
5. கடந்த அரசுகளைப் போலல்லாமல் இன, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் ஒன்றைப் பேசக்கூடிய ஜேவிபிஃஎன்பிபி அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றுள்ளது.
மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படையினரை வெளியேற்றுங்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து யுத்தம் ஏதுமற்ற சூழலில் அப்பாவி மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து கொலை செய்து ஈவிரக்கமின்றி குளக்கரையில் வீசிய இராணுவத்தினர் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்றும் நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் நிர்வாகம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:கடந்த 7ஆம் திகதி வியாழன் இரவு முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அப்பகுதியிலுள்ள 66ஆம் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரால் வரவழைக்கப்பட்டு மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மோசமான முறையில் தாக்குதலுக்குள்ளாகி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மூவர் இராணுவத்தினரில் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஒருவரின் நிலை தெரியாத நிலையில் எட்டாம்திகதி காலை முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னர் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர்.யுத்தம் முடிந்த காலத்திலிருந்து வடக்கு-கிழக்கு என்பது இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கின்றது. மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட படையினர் வடக்கு-கிழக்கிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக முல்லைத்தீவில் ஆறு பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இராணுவம் அங்கு நிலைகொண்டுள்ளது.யுத்தம் முடிந்து 15வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்ற சூழலில் இவ்வளவு பெருந்தொகையான இராணுவமும் முகாம்களும் வடக்கு-கிழக்கில் தேவையா என்ற கேள்வி தொடர்கின்றது. மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கு-கிழக்கில் ஆயுத ரீதியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எவ்வித வெளிப்படுத்தல்களும் இல்லை. மாறாக, தென்பகுதியில் நாளாந்தம் துப்பாக்கிச் சூடும் அதனால் கொலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு பொலிசாரே போதுமானதாக இருக்கின்ற பொழுது தொடர்ந்து இராணுவத்தினரை அதிதுமாகக் குவித்து வைத்திருப்பதும் நாம் என்ன செய்தாலும் சட்டம் எம்மை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையும் இராணுவத்தினர் எல்லைமீறிச் செல்வதற்கும் கொலை செய்வதற்கும் காரணமாக அமைகின்றது.இராணுவத்தினர் தொடர்பாகவும் அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவிலான அவநம்பிக்கைகள் இருக்கின்றன. வடக்கில் நடைபெறுகின்ற போதை வஸ்த்துகள் கடத்த, வியாபாரம் தொடர்பாக படையினருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையில் மறைமுக தொடர்புகள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. படையினர் தொடர்பில் யுத்தத்தின் பின்னர் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருப்பினும்கூட, இதுவரை ஆக்கபூர்வமான விசாரணைகளோ இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளோ இதுவரை முன்னெடுக்கப்பட்டதாக இதுவரை நாம் அறியவில்லை.இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபொழுது தமிழ் மக்களுக்குரித்தான காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்றும் பல்வேறு உறுதிமொழிகள் கொடுத்திருந்தாலும்கூட காணிகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் இக்காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினரின் அடாவடித்தனங்களும் குறையவில்லை.எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். அவரது மனைவி இப்பொழுது கணவனை இழந்து விதவையாக்கப்பட்டுள்ளதுடன் அவரதும் அவரது குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் முன்வைக்கின்றது.1. கபில்ராஜின் மனைவிக்கும் அவரது குழந்தைக்கும் அவரது எதிர்காலத்திற்குப் போதுமான நட்டஈட்டை வழங்க வேண்டும்.2. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தவாறு படையினர் குடியிருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.3. மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படைத்தரப்புகள்; வடக்கு-கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.4. தாங்கள் என்ன குற்றம் செய்தாலும் தப்பித்துக்கொள்ளும் படையினரின் எண்ணத்தை மாற்றும் முகமாக இதில் சம்பந்தப்பட்ட படையினருக்கு கொலைக் குற்றத்திற்கான உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.5. கடந்த அரசுகளைப் போலல்லாமல் இன, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் ஒன்றைப் பேசக்கூடிய ஜேவிபிஃஎன்பிபி அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றுள்ளது.