திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி , பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச் சுற்றுவட்டச் சந்தி, துறைமுக காவல் நிலையச் சந்தி ஆகியவற்றில் வழிச்செல்/சமிக்கை (signal) விளக்குகள் பொருத்த ஆவன செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (18) மாலை பிரதேச செயல மண்டபத்தில் இடம் பெற்றது அதன் போது தனது பிரேரனைகளை முன்வைத்தார்.
குறித்த பிரேரனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
திருகோணமலை பொது மீன் சந்தைப் பகுதியில் இருந்து மூன்றாம் கட்டை (3rd Mile Post) வரையான கடற் பகுதியில் உள்ள மீன்பிடி படகுகள் மாரி காலத்தில் கடற் பெருக்கினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது. இது மீனவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கடலோரத்தில் வள்ளங்கள் நிறுத்தக்கூடிய வகையில் அடுக்குமாடி படகு தரிப்பிடம் ஒன்றினை அமைக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர்களின் நன்மை கருதிக் கன்னியாப் பகுதியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு ஒப்புதல் அளிக்கவும்
கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை பராமரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாகப் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் இருந்தது. இடைக்காலத்தில் இப்பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதனை மீளவும் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் ஒப்படைக்க செய்ய வேண்டும்.
பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் கீழ் உள்ள வீதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்மை காணப்படுகின்றது.இதனால் மக்கள் மிகவும் இடர் படுகின்றனர். எனவே இவ்வீதி விளக்குகளைப் பொருத்த பிரதேச சபைக்கு நிதி வழங்க வேண்டும்.
அன்புவழிபுரம் ,செல்வநாயகபுரம்,வரோதயநகர் ஆகிய கிராமங்களில் வதியும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் இன்னல் படுகின்றனர். இச்சிக்கலை தீர்க்கும் பொருட்டாக இந்த மூன்று கிராமங்களுக்கும் நீர் வழங்கும் வகையில் ஒரு நீர்த்தொட்டி அமைக்க செய்ய வேண்டும்.
கன்னியா வெந் நீருற்று பொறுப்பை தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து மீளவும் பிரதேச சபைக்கு வழங்கவும்_சண்முகம் குகதாசன் எம்.பி திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி , பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச் சுற்றுவட்டச் சந்தி, துறைமுக காவல் நிலையச் சந்தி ஆகியவற்றில் வழிச்செல்/சமிக்கை (signal) விளக்குகள் பொருத்த ஆவன செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (18) மாலை பிரதேச செயல மண்டபத்தில் இடம் பெற்றது அதன் போது தனது பிரேரனைகளை முன்வைத்தார்.குறித்த பிரேரனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுதிருகோணமலை பொது மீன் சந்தைப் பகுதியில் இருந்து மூன்றாம் கட்டை (3rd Mile Post) வரையான கடற் பகுதியில் உள்ள மீன்பிடி படகுகள் மாரி காலத்தில் கடற் பெருக்கினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது. இது மீனவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கடலோரத்தில் வள்ளங்கள் நிறுத்தக்கூடிய வகையில் அடுக்குமாடி படகு தரிப்பிடம் ஒன்றினை அமைக்க வேண்டும். வாகன ஓட்டுநர்களின் நன்மை கருதிக் கன்னியாப் பகுதியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு ஒப்புதல் அளிக்கவும்கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை பராமரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாகப் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் இருந்தது. இடைக்காலத்தில் இப்பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதனை மீளவும் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் ஒப்படைக்க செய்ய வேண்டும்.பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் கீழ் உள்ள வீதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்மை காணப்படுகின்றது.இதனால் மக்கள் மிகவும் இடர் படுகின்றனர். எனவே இவ்வீதி விளக்குகளைப் பொருத்த பிரதேச சபைக்கு நிதி வழங்க வேண்டும்.அன்புவழிபுரம் ,செல்வநாயகபுரம்,வரோதயநகர் ஆகிய கிராமங்களில் வதியும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் இன்னல் படுகின்றனர். இச்சிக்கலை தீர்க்கும் பொருட்டாக இந்த மூன்று கிராமங்களுக்கும் நீர் வழங்கும் வகையில் ஒரு நீர்த்தொட்டி அமைக்க செய்ய வேண்டும்.