• Apr 23 2026

நாளை வாட்டி வதைக்கப்போகும் வெப்பம் - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Chithra / Apr 22nd 2026, 6:38 pm
image

இலங்கையின் வடமாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதன்படி , வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்பமான நிலை காணப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' (Heat Index), நாளை 21 மாவட்டங்களின் சில பகுதிகளில் 'எச்சரிக்கை' (Caution level) மட்டத்திற்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தவிர்ந்து கொள்ள பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இயன்றவரை நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


 நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 


நாளை வாட்டி வதைக்கப்போகும் வெப்பம் - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை இலங்கையின் வடமாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி , வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்பமான நிலை காணப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' (Heat Index), நாளை 21 மாவட்டங்களின் சில பகுதிகளில் 'எச்சரிக்கை' (Caution level) மட்டத்திற்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தவிர்ந்து கொள்ள பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இயன்றவரை நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement