அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது.
இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடலில் இலங்கை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது.இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.