• Nov 22 2025

திருமலை புத்தர்சிலை சர்ச்சை: தடயவியல் விசாரணை ஆரம்பம்; அரசாங்கத்தை கடுமையாக சாடிய ஞானசார தேரர்!

shanuja / Nov 18th 2025, 5:24 pm
image

​திருகோணமலை, கோட்டே கடற்கரை வீதியில் அண்மையில் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து விகாரையில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, இன்று ( 18) காலை தடயவியல் பொலிஸார் கள ஆய்வை ஆரம்பித்துள்ளனர்.


​மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த கடற்கரைப் பகுதிக்குச் சென்ற தடயவியல் பொலிஸார், விவகாரத்தின் மையமாக விளங்கும் புத்தர் சிலையின் சேத நிலைவரம், உடைந்த பொருட்கள் மற்றும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஆகியவற்றை தீவிரமாகப் பரிசீலனை செய்தனர்.


​இச்சம்பவத்தின் பின்னணியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16) இரவு பொலிஸாரால் குறித்த புத்தர்சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்தது. எனினும், மறுநாள் திங்கட்கிழமை ( 17) பகல், பௌத்த பிக்குகள் மற்றும் தரப்பினரின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, திருகோணமலை துறைமுகப் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அதே இடத்தில் மீண்டும் மத சடங்குகளுடன் குறித்த புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டது .


​தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


​தடயவியல் பொலிஸாரின் கள ஆய்வின் போது சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்ட பொருட்கள் மற்றும் ஏனைய விகாரை சேத விபரங்கள் யாவும் மேலதிக பரிசீலனைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.


​இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


​இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் தொடர்பாக, இன்று கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர், இவ்விவகாரத்தை அரசு கையாண்ட விதம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.


​புத்தர் சிலையை அகற்றுமாறு நடவடிக்கை எடுத்த அரசாங்கத்தையும், பொலிஸாரையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.


"இத்தகைய நடவடிக்கைகள் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்" என்றும், "பௌத்தத்தின் புனிதத் தளங்களைப் பாதுகாப்பதில் அரசு உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டது" என்றும் ஞானசார தேரர் குற்றம் சாட்டினார்.


​மதத் தலைவரின் வருகை மற்றும் பொலிஸாரின் தடயவியல் விசாரணை காரணமாக, குறித்த கடற்கரைப் பகுதியில் இன்று சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.

திருமலை புத்தர்சிலை சர்ச்சை: தடயவியல் விசாரணை ஆரம்பம்; அரசாங்கத்தை கடுமையாக சாடிய ஞானசார தேரர் ​திருகோணமலை, கோட்டே கடற்கரை வீதியில் அண்மையில் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து விகாரையில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, இன்று ( 18) காலை தடயவியல் பொலிஸார் கள ஆய்வை ஆரம்பித்துள்ளனர்.​மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த கடற்கரைப் பகுதிக்குச் சென்ற தடயவியல் பொலிஸார், விவகாரத்தின் மையமாக விளங்கும் புத்தர் சிலையின் சேத நிலைவரம், உடைந்த பொருட்கள் மற்றும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஆகியவற்றை தீவிரமாகப் பரிசீலனை செய்தனர்.​இச்சம்பவத்தின் பின்னணியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16) இரவு பொலிஸாரால் குறித்த புத்தர்சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்தது. எனினும், மறுநாள் திங்கட்கிழமை ( 17) பகல், பௌத்த பிக்குகள் மற்றும் தரப்பினரின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, திருகோணமலை துறைமுகப் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அதே இடத்தில் மீண்டும் மத சடங்குகளுடன் குறித்த புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டது .​தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.​தடயவியல் பொலிஸாரின் கள ஆய்வின் போது சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்ட பொருட்கள் மற்றும் ஏனைய விகாரை சேத விபரங்கள் யாவும் மேலதிக பரிசீலனைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.​இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.​இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் தொடர்பாக, இன்று கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர், இவ்விவகாரத்தை அரசு கையாண்ட விதம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.​புத்தர் சிலையை அகற்றுமாறு நடவடிக்கை எடுத்த அரசாங்கத்தையும், பொலிஸாரையும் அவர் கடுமையாக விமர்சித்தார்."இத்தகைய நடவடிக்கைகள் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்" என்றும், "பௌத்தத்தின் புனிதத் தளங்களைப் பாதுகாப்பதில் அரசு உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டது" என்றும் ஞானசார தேரர் குற்றம் சாட்டினார்.​மதத் தலைவரின் வருகை மற்றும் பொலிஸாரின் தடயவியல் விசாரணை காரணமாக, குறித்த கடற்கரைப் பகுதியில் இன்று சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Advertisement

Advertisement

Advertisement