• Jul 06 2025

டிப்பர், பட்டா, மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!

shanuja / Jul 5th 2025, 10:45 pm
image

டிப்பர்,பட்டா,மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் சிலாபம்-குருணாகல் வீதியில் ஹெட்டிப்பொல கிரிபொகுண பிரதேசத்தில் இன்று(5) இடம்பெற்றுள்ளது. 


டிப்பர் வாகனத்தின் பின்னால் பட்டா மோதியதுடன் அதன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நிகழ்நதுள்ளது.


விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பிட்டிப்பொல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

டிப்பர், பட்டா, மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம் டிப்பர்,பட்டா,மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் சிலாபம்-குருணாகல் வீதியில் ஹெட்டிப்பொல கிரிபொகுண பிரதேசத்தில் இன்று(5) இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பின்னால் பட்டா மோதியதுடன் அதன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நிகழ்நதுள்ளது.விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பிட்டிப்பொல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement