• Jul 13 2025

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Chithra / Jul 13th 2025, 12:26 pm
image

 

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ். பண்ணாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று காலை வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் நினைவு தினம் இடம்பெற்றது.

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதேவேளை அமிர்தலிங்கம் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் மூளாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

இதில் அமரரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை கௌரவ தவிசாளர்  ச.ஜயந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள்

மற்றும் கட்சி  ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு  இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ். பண்ணாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.இன்று காலை வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் நினைவு தினம் இடம்பெற்றது.பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை அமிர்தலிங்கம் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் மூளாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் அமரரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை கௌரவ தவிசாளர்  ச.ஜயந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள்மற்றும் கட்சி  ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement