சர்வதேச ரீதியாக தொடரும் -புசாந்தனின் பதக்க வேட்டை யப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய பசுபிக் சம்பியன் பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி 3 பிரிவுகளிலும் பதக்கங்களை வென்றெடுத்தார் யாழ்ப்பாணத்தின் மைந்தன் புசாந்தன்அந்தவகையில் இன்றைய ஆசிய பசுபிக் சம்பியன் போட்டியில் பங்குபற்றி 3 பிரிவுகளில் 2ஆம் இடம் -Dead Lift 307.Kg2ஆம் இடம் -Squat 325Kg3ஆம் இடம் -Bench Press- 200Kg Over Roll - 2Place 832.5Kgபோன்ற பதக்கங்களை தனதாக்கி கொண்டார். அந்தவகையில் அவர் யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்மேலும் அவர் முகநூலில் தனது சாதனையை பதிவிட்டுள்ளார்ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான போட்டி ஜப்பானில் நடைபெற்றது. இதில் 832.5kg தூக்கி, இலங்கையின் புதிய சாதனையுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றதை நினைத்து சொல்ல முடியாத மகிழ்ச்சியடைகிறேன். இரண்டு கிழமை முன் டெங்கு காய்ச்சலால் வைத்தியசாலையின் கட்டிலில் இருந்த போது—even இந்த போட்டியில் பங்கேற்க முடியுமா என்றே சந்தேகமாக இருந்தது. இன்று என் நாட்டிற்கும் மக்களுக்கும் இந்த பதக்கத்தை அளிக்க முடிந்ததைக் நினைத்து பெருமையடைகிறேன் என பதிவிட்டுள்ளார்வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1C5ieGDXn7/