• Jul 13 2025

வவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு!

Chithra / Jul 13th 2025, 12:33 pm
image


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின்  உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  

இன்று ஆரம்பிக்கப்படும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜ.த.தே.கூட்டணியின் செயலாளர்  நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



வவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின்  உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  இன்று ஆரம்பிக்கப்படும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜ.த.தே.கூட்டணியின் செயலாளர்  நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement