• May 22 2025

வடக்கு-தெற்கு என்று உப்பு கிடையாது உப்பு உப்பு தான்.. சபையில் அர்ச்சுனா-சுனில் ஹெந்துநெத்தி கருத்து மோதல்..!

Sharmi / May 22nd 2025, 2:33 pm
image

வடக்கு -தெற்கு என்று உப்பு கிடையாது. எப்பொழுதும் உப்பு உப்பு தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா- சுனில் ஹெந்துநெத்தி  இடையே  கருத்து மோதல் ஏற்பட்டது.  இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறு தெரிவித்தார்.

இருவருக்குமிடையே இடம்பெற்ற கருத்து மோதலில் சுனில் ஹெந்துநெத்தி  தெரிவிக்கையில்,

வடக்கு உப்பை தெற்குக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறினார்கள். ஆனையிறவு உப்பை அனுப்பாதீர்கள் என்றார்கள். வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று ஒன்றும் இல்லை. இப்பொழுதெல்லாம் ஒரு உப்பு தான்.

பிரபாகரனின் உப்பு அப்போது இருந்திருக்கலாம்.நீங்கள் பொய்யான வாக்குறுதிகளை அப்போது அளித்திருந்தீர்கள். ஆனையிறவு உப்பை நீங்கள் அனுப்ப வேண்டாம் என்று கூறினீர்கள். 2012 முதல் புத்தளத்தில் ரஜலுணு உப்பு இருந்தது.  அந்தக் காலத்தில் அதை நாங்கள் மாற்றம் செய்துள்ளோம். ரஜலுணு உப்பு கிடையாது.  ஆனையிறவு உப்பு கிடையாது. உப்பு என்றால் உப்பு தான். அதை நாங்கள் மாற்றியமைக்கவில்லை.  

அர்ச்சுனா நீங்கள் இங்கே நகைப்புக்களை செய்ய வேண்டாம். இவர்களுக்கு தலைப்பு ஒன்று இல்லை என்றால் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். ஆனையிறவு மக்கள் உங்களைத் தான் தாக்குவார்கள். அங்கு செல்லாதீர்கள்.    இந்த உப்பு தொடர்பில் வந்த பிரச்சினை நல்லது.  

இப்போது  உப்புக்கான பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கின்றது. உப்பு  துறைமுகத்துக்கு வந்திருக்கின்றது. அடுத்ததாக 2,3 நாட்களுக்குள் கடைகளிற்கும் அனுப்பி வைக்கப்படும் . இந்த அரசாங்கம் அதற்கு பொறுப்பு, அடுத்ததாக நீங்கள் ஒரு பாம்மைப் பிடித்துக் கொள்ளுங்கள். சாரைப் பாம்பையேனும் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஆகவே இல்லாத பிரச்சினைகளை இங்கே எழுப்ப வேண்டாம். பாராளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். 3 நாட்கள் உப்பைப் பற்றி கதைத்து விட்டீர்கள். - என்றார்.

இதையடுத்து அர்ச்சுனா தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு என்று ஒரு  உப்பு கிடையாது.  நாங்கள் எந்த இடத்திலும் ரஜலுணு ராஜலுணு என்று கூறவில்லை.

வடக்கு உப்பை தெற்குப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்று நான் கூறவில்லை. வடக்கு உப்பை தெற்கு உப்புக்கு வழங்குவதற்கு நான் உதவி செய்கின்றேன்.

 இது சிறப்புரிமைச்சட்டத்தில்  வருகின்றது. எந்தவொரு உறுப்பினரும் அவரவர் தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டால் அவர் தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவின் கீழ் அதற்கான பிரச்சினையை எழுப்ப முடியும். நான் உங்களுடைய பிரச்சினையைப் புரிந்து கொண்டேன். நான் ஒருபோதும்  கூறவில்லை. அங்கிருந்து கூற வேண்டாம். நீங்கள் இதை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். என்றார். 

வடக்கு-தெற்கு என்று உப்பு கிடையாது உப்பு உப்பு தான். சபையில் அர்ச்சுனா-சுனில் ஹெந்துநெத்தி கருத்து மோதல். வடக்கு -தெற்கு என்று உப்பு கிடையாது. எப்பொழுதும் உப்பு உப்பு தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையில் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா- சுனில் ஹெந்துநெத்தி  இடையே  கருத்து மோதல் ஏற்பட்டது.  இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறு தெரிவித்தார்.இருவருக்குமிடையே இடம்பெற்ற கருத்து மோதலில் சுனில் ஹெந்துநெத்தி  தெரிவிக்கையில்,வடக்கு உப்பை தெற்குக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறினார்கள். ஆனையிறவு உப்பை அனுப்பாதீர்கள் என்றார்கள். வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று ஒன்றும் இல்லை. இப்பொழுதெல்லாம் ஒரு உப்பு தான்.பிரபாகரனின் உப்பு அப்போது இருந்திருக்கலாம்.நீங்கள் பொய்யான வாக்குறுதிகளை அப்போது அளித்திருந்தீர்கள். ஆனையிறவு உப்பை நீங்கள் அனுப்ப வேண்டாம் என்று கூறினீர்கள். 2012 முதல் புத்தளத்தில் ரஜலுணு உப்பு இருந்தது.  அந்தக் காலத்தில் அதை நாங்கள் மாற்றம் செய்துள்ளோம். ரஜலுணு உப்பு கிடையாது.  ஆனையிறவு உப்பு கிடையாது. உப்பு என்றால் உப்பு தான். அதை நாங்கள் மாற்றியமைக்கவில்லை.  அர்ச்சுனா நீங்கள் இங்கே நகைப்புக்களை செய்ய வேண்டாம். இவர்களுக்கு தலைப்பு ஒன்று இல்லை என்றால் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். ஆனையிறவு மக்கள் உங்களைத் தான் தாக்குவார்கள். அங்கு செல்லாதீர்கள்.    இந்த உப்பு தொடர்பில் வந்த பிரச்சினை நல்லது.  இப்போது  உப்புக்கான பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கின்றது. உப்பு  துறைமுகத்துக்கு வந்திருக்கின்றது. அடுத்ததாக 2,3 நாட்களுக்குள் கடைகளிற்கும் அனுப்பி வைக்கப்படும் . இந்த அரசாங்கம் அதற்கு பொறுப்பு, அடுத்ததாக நீங்கள் ஒரு பாம்மைப் பிடித்துக் கொள்ளுங்கள். சாரைப் பாம்பையேனும் பிடித்துக் கொள்ளுங்கள். ஆகவே இல்லாத பிரச்சினைகளை இங்கே எழுப்ப வேண்டாம். பாராளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். 3 நாட்கள் உப்பைப் பற்றி கதைத்து விட்டீர்கள். - என்றார்.இதையடுத்து அர்ச்சுனா தெரிவிக்கையில்,வடக்கு கிழக்கு என்று ஒரு  உப்பு கிடையாது.  நாங்கள் எந்த இடத்திலும் ரஜலுணு ராஜலுணு என்று கூறவில்லை. வடக்கு உப்பை தெற்குப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்று நான் கூறவில்லை. வடக்கு உப்பை தெற்கு உப்புக்கு வழங்குவதற்கு நான் உதவி செய்கின்றேன். இது சிறப்புரிமைச்சட்டத்தில்  வருகின்றது. எந்தவொரு உறுப்பினரும் அவரவர் தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டால் அவர் தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவின் கீழ் அதற்கான பிரச்சினையை எழுப்ப முடியும். நான் உங்களுடைய பிரச்சினையைப் புரிந்து கொண்டேன். நான் ஒருபோதும்  கூறவில்லை. அங்கிருந்து கூற வேண்டாம். நீங்கள் இதை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement