சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை எதிர்த்தமைக்காக இரண்டாம் வருட மாணவனை தாக்கிய 6 மாணவர்களுக்கு வகுப்பு தடைவிதித்துள்ளது.
இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்ட 6 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 2ஆம் ஆண்டு மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவன் பகிடிவதையை எதிர்த்ததையடுத்து அவரை கடுமையாக தாக்கினர்.
இதில்,காயமடைந்த மாணவன் வெலிகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்களான 6 மாணவர்களையும்bகைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவருக்கு ஏற்பட்ட நிலை. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை எதிர்த்தமைக்காக இரண்டாம் வருட மாணவனை தாக்கிய 6 மாணவர்களுக்கு வகுப்பு தடைவிதித்துள்ளது.இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்ட 6 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 2ஆம் ஆண்டு மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவன் பகிடிவதையை எதிர்த்ததையடுத்து அவரை கடுமையாக தாக்கினர். இதில்,காயமடைந்த மாணவன் வெலிகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்களான 6 மாணவர்களையும்bகைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை, பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது.குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.