• Aug 06 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அதிரடியாக கைது

Chithra / Aug 6th 2025, 11:00 am
image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று காலை  கைது செய்யப்பட்டார். 

நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அதிரடியாக கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று காலை  கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதுகடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement